மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று (31) மாலை 05.15 மணியளவில் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில்பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அக்னியில் சங்கமமானது.
கடந்த 26ஆம் திகதி இரவு மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்த அமரர் தொண்டமானின் பூதவுடல், பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்போடு கொட்டகலையிலிருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்டு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.
அன்னாரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இந்து சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டதுடன், இறுதி அஞ்சலி நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மும்மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பலரின் கண்ணீர் அஞ்சலியோடு விடைபெற்றார் ஆறுமுகன் தொண்டமான்!
Reviewed by Editor
on
May 31, 2020
Rating:
Reviewed by Editor
on
May 31, 2020
Rating:


