ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும்


ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் இன்று (18) திங்கட்கிழமை முதல் 19 ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இதற்கமைவாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 19 அலுவலக ரயில் சேவைகளை முன்னெக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாவலப்பிட்டியிலில் இருந்து கண்டிக்கும் மாத்தளையில் இருந்து கண்டிக்குமாக இந்த ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

இதேபோன்று பொல்காவலையில் இருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து காலிக்குமிடையிலும் இதற்கு முன்னர் இடம்பெற்ற ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பணிகளின் நிமித்தம் செல்பவர்கள் தங்கள் நிறுவங்களின் முகாமையாளர்கள் மூலம் ரயில்வே திணைக்களத்தில் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் Reviewed by Editor on May 18, 2020 Rating: 5