(றிஸ்வான் சாலிஹூ)
சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.டப்ளியு.எம்.சமீம் அவர்கள் இந்த புனித ரமழான் மாதத்தின் இறுதி பத்து தினங்களிலும் தனது தனியார் வைத்திய சேவைகளை முற்றிலும் இலவசமாக செய்வதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
Covid-19 இன் Lock down காரணமாக மக்கள் தொழிலின்றி கஷ்டப்படும் இப்புனித ரமழானின் கடைசிப் பத்தில் தனது வைத்திய சேவையை தனியார் மருத்துவ நிலையங்களில் மதம், ஏழை மற்றும் பணக்கார வேறுபாடின்றி முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வைத்திய நிபுணர் சமீம் தெரிவித்துள்ளார்.
இந்த இலவச சேவையைப் பெற்றுக் கொள்ள, கீழ் குறிப்பிடப்படும் தனியார் வைத்தியசாலைகளை தொடர்பு கொள்வதோடு, அந்த தனியார் வைத்தியசாலையில் உங்கள் பதிவுகளையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் வைத்தியர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்முனையில் - Mediland, JMH, & Ahamed Ali Hospitals
சம்மாந்துறையில்- MediCare & Medi Channel
நிந்தவூரில் - Medi Shine Hospital
மருதமுனையில் - Mercy Hospital.
வைத்திய நிபுணர் சமீம் அவர்களின் இலவச மருத்துவ சேவை
Reviewed by Editor
on
May 16, 2020
Rating:
