அக்கரைப்பற்றில் இன்று ஊடரங்கு சட்டம் மதிக்கப்பட்டுள்ளது....


(றிஸ்வான் சாலிஹூ)

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் நேற்று (23) சனிக்கிழமை இரவு 8.00மணி முதல் நாளை மறுநாள் (26) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00மணி வரை தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊடரங்கு காரணமாக இன்று (24) அக்கரைப்பற்றில் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் புனித நோன்பு பெருநாளை கொண்டாடியுள்ளார்கள்.

இன்று முஸ்லிம்கள் புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் இந்த வேளையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக பெருநாள் தொழுகை மற்றும் இதர பெருநாள் வணக்கங்களை வீடுகளிலே நிறைவேற்றி வருகின்றார்கள்.

இன்று அக்கரைப்பற்றில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி, அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு சட்டத்தை மதித்து, முப்படையினருக்கும் ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் இன்று ஊடரங்கு சட்டம் மதிக்கப்பட்டுள்ளது.... அக்கரைப்பற்றில் இன்று ஊடரங்கு சட்டம் மதிக்கப்பட்டுள்ளது.... Reviewed by Editor on May 24, 2020 Rating: 5