சிறுவனை காணவில்லை



காத்தான்குடி-1, டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன் என்பவரின் மகன் அப்துல்லாஹ் வயது 14 அவர்கள் நேற்று வியாழக்கிழமை (21) மாலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இது வரை வீடு வந்து சேரவில்லையைன அப்துல்லாஹ்வின் தந்தையான முஹைதீன் அவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று 6.30 மணியளவில்  வெள்ளை நிர சேட் மற்றும் நீலநிர டெனிம் ரவுசர் அனிந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இச்சிறுவனை கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான தகவலை அறிந்தவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கே.எல்.எம் முஸ்தபா அவர்களுக்கு அல்லது அப்துல்லாவின் தந்தையான முஹைதீன் அவர்களுக்கு தகவல்களை அறிவிக்கவும்.


கே.எல்.எம் முஸ்தபா  (0778873126)
பெரும்குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி 

அப்துல்லாஹ்வின் தந்தை
முஹைதீன் (0774111196)


(Zajilnews)
சிறுவனை காணவில்லை சிறுவனை காணவில்லை Reviewed by Editor on May 22, 2020 Rating: 5