கொழும்பு பங்குச் சந்தை ஆரம்பமாகிறது


கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை (11) முற்பகல் 10.30 மணி முதல்  11.00 மணி வரை பங்கு பரிவர்த்தனைக்கு முந்தைய அமர்வு இடம்பெறும் என்பதோடு, பங்குச் சந்தை திறந்த பரிவர்த்தனை முற்பகல் 11.00 மணி முதல் 1.00 மணி வரை இயங்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு பங்குச் சந்தை ஆரம்பமாகிறது கொழும்பு பங்குச் சந்தை ஆரம்பமாகிறது Reviewed by Editor on May 09, 2020 Rating: 5