உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகின்ற நிலையில், இதுவரை உலகளவில் ரீதியாக இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தையும் தாண்டிவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் அமெரிக்காவில் அதிக கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை அதற்குரிய தடுப்பூசி இல்லாத நிலையில் , அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் எவ்வாறு சரி அமெரிக்காவில் கொரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்ற போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Reviewed by Editor
on
May 05, 2020
Rating:
Reviewed by Editor
on
May 05, 2020
Rating:
