(றிஸ்வான் சாலிஹூ)
நடைபெற்று முடிந்த 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடத்தையும், அகில இலங்கை ரீதியில் 15ஆம் இடத்தையும் பெற்று பெருமை சேர்த்து தந்துள்ளது.
இக் கல்வி வலயம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகிய 3 கல்வி கோட்டங்களை உள்ளடக்கிய ஒரு வலயமாகும்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள சுமார் 24 பாடசாலைகளிலில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் 38 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ (9A) தர சித்தி பெற்றுள்ளார்கள்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழீமி) கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று கல்வி வலயம் இரண்டாமிடம்
Reviewed by Editor
on
May 03, 2020
Rating:
