அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாத்திரமே அனுமதி


சாதாரண பயணிகள்  இன்னும் இரண்டு வாரங்களுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக குறைந்தது 2 வாரங்களுக்கு சாதாரண பொது போக்குவரத்துக்கு வசதி செய்ய வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாத்திரமே அனுமதி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாத்திரமே அனுமதி Reviewed by Editor on May 10, 2020 Rating: 5