மருந்தை கண்டுபிடித்ததாக இத்தாலி அறிவிப்பு


உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்துக்கொண்டிருக்கும் இவ்வேலையில் இத்தாலிய விஞ்ஞானிகள் இதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலியின் டாக்கிஸ் நிறுவண தலைமை நிருவாகியான லூய்கி இத்தாலிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியை முதலில் எலிக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளபோது அது ஆன்டிபயோட்டின்களை உருவாக்கி மனித உடலிலுள்ள வைரஸின் செயல்பாட்டை தடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதுடன், மேலும் அதை பரிசோதனை செய்தபோது மனித உடலிலுள்ள வைரஸ் அணுக்களை அழித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தடுப்பூசியை தற்போது ரோம் நகரிலுள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மருந்தை கண்டுபிடித்ததாக இத்தாலி அறிவிப்பு மருந்தை கண்டுபிடித்ததாக இத்தாலி அறிவிப்பு Reviewed by Editor on May 07, 2020 Rating: 5