கொரோனா தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 60 இலட்சம் ரூபா தனது சொந்த செலவில் உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுபினருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்கள் நேற்று (11) திங்கட்கிழமை ஒலுவில் மக்களுக்கு ஒரு தொகுதி பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பொருட்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம் அமீன் உள்ளிட்டோருக்கு கையளித்து வைக்கப்பட்டது.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், தமீன் ஆப்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(ஊடகப்பிரிவு)
ஒலுவில் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
Reviewed by Editor
on
May 12, 2020
Rating:
