ஜேர்மனி மீண்டும் ஊரடங்கு நோக்கிச் செல்லுமா?


ஜேர்மனியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என ஜேர்மனி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக ஜெர்மனியில் தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைப் போலவே ஜேர்மனியில் தான் முதல் முறையாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வாகன வர்த்தகங்கள், உணவகங்கள் மீண்டும் இயங்க துவங்கின.

இதுவரை இரண்டாம் கட்டமாக கொரோனா பாதிப்புகள் கடுமையாக அதிகரித்த நாடு என எந்த நாட்டையும் குறிப்பிட முடியாது. ஆனால் சில நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போல, ஜேர்மனியிலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஆனால் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படும் நிலைக்கு ஜேர்மனி தள்ளப்படாது என அந்நாட்டை சேர்ந்த தொற்று நோய் மருத்துவ நிபுணர் கரே மோல்பக் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜேர்மனி மீண்டும் ஊரடங்கு நோக்கிச் செல்லுமா? ஜேர்மனி மீண்டும் ஊரடங்கு நோக்கிச் செல்லுமா? Reviewed by Editor on May 12, 2020 Rating: 5