கொவிட்-19 கொரோனா நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்கான புதிய வாழ்க்கை முறை தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் உத்தியோகபூர்வமாக முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நிலையான மற்றும் நடமாடும் விற்பனையாளர்களிடமிருந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது,
நாம் கடைப்பிடிக்க வேண்டியவை:
* குடும்பத்தில் ஒருவர் (ஆரோக்கியமான இளம் வயதினர்) மட்டும் செல்லுங்கள்.
* உங்களுக்கு என்று தனியான பையை அல்லது கூடையை எடுத்து செல்லுங்கள்.
* உங்கள் முகக் கவசத்தை சரியான முறையில் அணிந்துகொள்ளுங்கள்.
* எப்பொழுதும் ஒரு மீட்டர் தூர இடைவெளியே அடுத்தவரிலிருந்து பேணுங்கள்.
* பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு குறைந்த நேரத்தை செலவிடுங்கள்.
* பணப் பரிமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக, எப்போதும் உரிய சரியான தொகைப் பணத்தைச் செலுத்துவதற்கு ஏற்ப தயாராகப் பனத்தாள்கள் மற்றும் நாணயங்களை வைத்திருங்கள்.
* காய்கறிகள், பழங்கள் போன்ற கொள்வனவு செய்த பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்லும் முன் முறையாகக் கழுவுங்கள்.
* வீடு திரும்பியவுடன் ஆகக்குறைந்தது 20 வினாடிகளுக்காவது கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுங்கள்.
* பாவித்த முகக்வசங்களைப் பாதுகாப்பான முறையில் மூடக்கூடிய குப்பைதொட்டி ஒன்றினுள் இட்டு அப்புறப்படுத்துங்கள்.
நாம் தவிர்க்க வேண்டியவை:
* உங்கள் மூக்கு, வாய், மற்றும் கண்களைத் தொடுவதனைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
* பலசரக்குப் பொருட்களைத் தேவையற்றுத் தொடுவதைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
* தடிமன், இருமல்,போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வெளியில் எடுத்து செல்ல வேண்டாம்.
* சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுப்படுவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அந்த தெளிவூட்டல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வாழ்க்கை முறை தொடர்பில் தெளிவூட்டல்
Reviewed by Editor
on
May 11, 2020
Rating:
