(றிஸ்வான் சாலிஹூ)
கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலங்களை (பள்ளிவாசல்கள்) மக்களது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலில்லாத வகையில் மீளத் திறப்பது பற்றி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களோடு இலங்கை வக்ப் சபை கலந்தாலோசித்து வருகின்றது என்று இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி. எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
எனவே, வக்ப் சபையின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரும் வரையில் இந்த விடயத்தில் பொறுமை காக்குமாறு பள்ளிவாயல் நிர்வாகங்களையும், பொதுமக்களையும் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது என்று அதன் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிவாயல்களை மீளத் திறத்தல் தொடர்பிலான தகவல்
Reviewed by Editor
on
May 31, 2020
Rating:
Reviewed by Editor
on
May 31, 2020
Rating:
