காத்தான்குடியில் உள்ள கர்பலா பிரதேச கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (08) வெள்ளிக்கிழமை மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த விடுதி கடந்த ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான், தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த விடுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
கடற்கரை விடுதி பொலிஸாரினால் சுற்றி வளைப்பு
Reviewed by Editor
on
May 08, 2020
Rating:
