மலையகப் பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதோடு, அங்கு மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.
மண் சரிவு , பாறைகள் புரலும் அனர்த்த நிலை காணப்படுவதினால் அப்பிரதேசத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதேவேளை அட்டன் - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண் மற்றும் மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகப் பிரதேசத்தில் கடும் மழை , பிரதான வீதிகளில் மண் சரிவு
Reviewed by Editor
on
May 16, 2020
Rating:
