மட்டக்களப்பில் வாள் வெட்டு, ஒருவர் பலி


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந் தெரியாதோரின் வாள் வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது. 
கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான 30 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் .குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில் சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புக்கு அவர் பதில் அளித்தவாறு வீட்டின் பின்பகுதியான வெற்று காணிப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் சுமார் அரை மணித்தியாலயத்தின் பின்னர் ஒரு சத்தம் கேட்டது அதனையடுத்து அங்கு உறவினர்கள் சென்றபோது தலையால் இரத்தம் வழிந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே வேளை குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் மண்டூர் பகுதியைச் சேர்ந்த இருவரை காத்தான்குடி பொலிசாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் இணைந்து இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர்.குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வாள் வெட்டு, ஒருவர் பலி மட்டக்களப்பில் வாள் வெட்டு, ஒருவர் பலி Reviewed by Editor on May 16, 2020 Rating: 5