நாளை 18 மணிநேர நீர்வெட்டு


கொழும்பின் சில பகுதிகளில் நாளை (27) 18மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
நாளை 18 மணிநேர நீர்வெட்டு நாளை 18 மணிநேர நீர்வெட்டு Reviewed by Editor on June 26, 2020 Rating: 5