முஸ்லிம் சமய திணைக்களத்தின் அறிவித்தல்



முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சேவைகளை நாடி வருகின்ற மக்களினதும், எமது உத்தியோகத்தர்களினதும் பாதுகாப்புக் கருதி, பொது மக்களின் வருகையை மட்டுப்படுத்துவதுடன் அதற்குப் பதிலாக அவர்கள் எமது திணைக்களத்தின் முகநூல் (FaceBook) பக்கத்தினூடாக எம்மை எழுத்து மூலம் தொடர்பு கொள்ளவும், கோரிக்கைகள் மற்றும்  ஏனைய விடயங்களையும் எழுத்து மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

உங்களது கோரிக்கைகள் மற்றும் கடிதங்களை எமது திணைக்களத்தின் முகநூல் (Face Book) பக்கமான Department of Muslim Religious and Cultural Affairs (https://www.facebook.com/Department-of-Muslim-Religious-and-Cultural-Affairs-1036074906415798/) இற்கு அனுப்பி வைக்க முடியும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சமய திணைக்களத்தின் அறிவித்தல் முஸ்லிம் சமய திணைக்களத்தின் அறிவித்தல் Reviewed by Editor on June 26, 2020 Rating: 5