தேர்தல் முடிவு 6ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும்



(றிஸ்வான் சாலிஹூ)

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவு 6ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும் தேர்தல் முடிவு 6ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும் Reviewed by Editor on June 30, 2020 Rating: 5