(றிஸ்வான் சாலிஹூ)
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை 06 ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் திரு.எம்.சோமசூரியம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முதற் கட்டமாக, 06 மாதகால குறுங்கால பாடநெறிகள் மற்றும் NVQ 5 /6 முழு நேர கற்கை நெறிகள் ஜுலை 06ஆம் திகதியும், இரண்டாம் கட்டமாக, ஒரு வருடகால பாடநெறிகள் எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், சகல பகுதி நேர பாடநெறிகளும் ஜுலை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், சகல பகுதி நேர பாடநெறிகளும் ஜுலை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப கல்லூரிக்கு மாணவர்கள் வருகை தரும் போது கட்டாயம் தமது பிரவேச அட்டையினை கொண்டு வருதல் கட்டாயமானதாகும் என்றும் அதிபர் சோமசூரியம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கற்கை நெறிக்குமான விரிவுரைகளை ஆரம்பிக்கும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் தமது பிரிவு தலைவர்களை தொடர்பு கொள்ளுமாறு அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.பிஸ்ரின் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்.
Reviewed by Editor
on
June 30, 2020
Rating:
Reviewed by Editor
on
June 30, 2020
Rating:
