(றிஸ்வான் சாலிஹூ)
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ஜ.எம்.மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ. மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (01) அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவி செயலாளராக கடமையாற்றிய எம்.ரீ.எம்.நிசாமை மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்திருந்தார்.
குறித்த நியமனத்திற்கு எதிராக மன்சூர் அவர்களினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் இன்று (01) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மன்சூர் அவர்களை தொடர்ந்தும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்ற தீர்ப்பளித்துள்ளார்.
எம்.ஜ.எம்.மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Editor
on
June 01, 2020
Rating:
Reviewed by Editor
on
June 01, 2020
Rating:
