பணித் தடைக்கு உள்ளாக்கப்பட்ட யத்தன்பலாவ, குருணாகலையைச் சேர்ந்த நபரொருபர் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பதவியுயர்வுகளுடன் மீண்டும் தன்னை சேவையில் அமர்த்துமாறு ஜனாதிபதி எழுதியது போல குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடிதத் தலைப்பையும், அவரின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அனுப்பப்பட்ட அனைத்தும் போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபரை வங்கி தலைமையகத்திற்கு அழைத்ததன் பின்னர், நேற்று (03) அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்படி போலி ஆவணத்தை தயார் செய்வதற்குப் பயன்படுத்திய மடிக் கணினி மற்றும் ஏனைய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, அவரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாகப் பயன்படுத்தியவர் கைது
Reviewed by Editor
on
June 04, 2020
Rating:
Reviewed by Editor
on
June 04, 2020
Rating:
