மட்டக்களப்பு நகர் வேதாரணியம் வீதியில் பிரயாணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றியதில் அதனை ஓட்டிச் சென்றவர் மோட்டர் சைக்கிளை விட்டு பாய்ந்து தப்பித்ததுடன் மோட்டர் சைக்கில் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ள சம்பவம் இன்று (08) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சோந்த கடை ஒன்றில் வேலை செய்துவரும் 40 வயதுடையவர் சம்பவதினமான இன்று காலை ஏறாவூர் பிரதேசத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு பின்னால் உள்ள வேதாரணியம் வீதி வழியக சென்ற போது மோட்டர்சைக்கிள் திடீரென தீப்பற்றியது.
இதனையடுத்து மோட்டர்சைக்கிளை விட்டு பாய்ந்ததுடன் மோட்டர்சைக்கி தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது இந்த பகுதிக்கு பொலிசார் சென்று தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நன்றி - தமிழன்.lk
நடு வீதியில் பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்
Reviewed by Editor
on
June 08, 2020
Rating:
Reviewed by Editor
on
June 08, 2020
Rating:
