ஜூலை 13வரை ஒத்திவைப்பு


கொரோனா தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுத்து, கட்டாயமாக எரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் விசாரணை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று (08) திங்கட்கிழமை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரத்திலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சிலருக்கு அறிவித்தல் சென்று சேரவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ள அதேவேளை, ஏற்கனவே பிறிதொரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும், இன்று ஏனைய எட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையிலே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி- சோனகர்.கொம்
ஜூலை 13வரை ஒத்திவைப்பு ஜூலை 13வரை ஒத்திவைப்பு Reviewed by Editor on June 08, 2020 Rating: 5