(றிஸ்வான் சாலிஹூ)
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முல்லைத்தீவு பள்ளிவாசல் வீதியில் மர நடுகைத் திட்டம் இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972ஆம் ஆண்டு முதல் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினம் ஜக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 05ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும், அதன் இயற்கையையும் பாதுகாப்பதற்காக தேவைப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டை பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை தெளிவுபடுத்தவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதனடிப்படையில்,அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த மரநடுகைத் திட்ட நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் மரநடுகைத் திட்டம்....
Reviewed by Editor
on
June 05, 2020
Rating:
Reviewed by Editor
on
June 05, 2020
Rating:


