அக்கரைப்பற்றில் "சப்ரிகம" வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது



(றிஸ்வான் சாலிஹூ)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட "சப்ரிகம" எனும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (02) செவ்வாய்க்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


பாதைகள், சிறிய பாலம், கால்வாய்களுக்கான இறங்கு படிக்கட்டுக்கள் என்பன இத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வட்டாரங்களிலும் சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யக்கூடிய இத்திட்டத்தின்
முதலாவதாக அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி, இசங்கனிச்சீமை வட்டாரம் முதன்மைப்படுத்தப்பட்டு அந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இசங்கனிச்சீமை வட்டாரத்திற்கு பொறுப்பான அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம்.ஐயூப் அவர்கள் தனது வட்டாரத்தில், அல்-கமர் பாடசாலைக்கு முன்பாக உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவசியம் என கருதப்பட்ட கால்வாய்களுக்கு இறங்கு படிக்கட்டு வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.


அத்துடன், இந்த பிராந்தியம் விவசாயிகளை மையப்படுத்தி அமையப்பெற்றதினால் விவசாயிகளின் நலன் கருதி அவர்களுடைய வயல் அறுவடைக் காலங்களில் வாகனங்களை வயல் இடங்களுக்கு கொண்டுசெல்ல போதிய இடைவெளி இல்லாமலிருந்த பாலத்தை விஸ்தரிக்கும் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்கப்பட்டது என்று பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை கெளரவ உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் மற்றும் வட்டார உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.













அக்கரைப்பற்றில் "சப்ரிகம" வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது அக்கரைப்பற்றில் "சப்ரிகம" வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது Reviewed by Editor on June 02, 2020 Rating: 5