கருணா அம்மானை கைது செய்ய கோரிக்கை


தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் தமிழர் மகா சபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கைது செய்யக்கோரி கடுவல நகர சபை உறுப்பினர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் இன்று (25) வியாழக்கிழமை அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆனையிறவுத் தாக்குதலின் போது 2000 - 3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக  நாவிதன்வெளி பிரசேத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைவாகவே கருணா அம்மானை கைது செய்யக்கோரி கடுவல நகர சபை உறுப்பினர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருணா அம்மானை கைது செய்ய கோரிக்கை கருணா அம்மானை கைது செய்ய கோரிக்கை Reviewed by Editor on June 25, 2020 Rating: 5