கொவிட் -19 வைரஸ் தொற்றால் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.
அதன்படி, 885 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1903 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
இந்த 02 நபர்களும் உட்பட 885 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் தொற்றால் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிப்பு கொவிட் -19 வைரஸ் தொற்றால் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிப்பு Reviewed by Editor on July 06, 2020 Rating: 5