(றிஸ்வான் சாலிஹூ)
கொவிட்-19 கொரோணா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்ட அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று (06) சுகாதார வழிகாட்டலை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் சுகாதார நடைமுறைகளை பேணி கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி அதிபர் எம்.சோமசூரியம் தலைமையில் இன்று (06) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலை அக்கரைப்பற்று தொழில்நுட்பகல்லூரிக்கு சென்று களத்தில் ஈடுபட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கல்லூரியை முழுமையாக பார்வையிட்டு் கல்லூரி மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஆயத்த நிலையில் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய ஆரம்ப தினத்தில் கல்லூரி அதிபர், பதிவாளர், பிரதி அதிபர், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரி கல்வி நடவடிக்கை சுகாதார வழிகாட்டுதலுடன் மீள ஆரம்பம்
Reviewed by Editor
on
July 06, 2020
Rating:
Reviewed by Editor
on
July 06, 2020
Rating:




