(பர்ஹானா பதுறுதீன்)
தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் எதிர்வரும் ஆகஸ்ட் 02ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்ததன் பின்னர் 03 ஆம் 04 ஆம் திகதிகளில் இலத்திரனில், அச்சு ஊடகங்கள் எதிலும் தேர்தல் பிரச்சாரங்கள் செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (29) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.
இம்முறை பிரச்சாரங்கள் இல்லாத அமைதிக்காலத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை என பாராளுமன்றத் தெரிவுக் குழு கோரியுள்ளதால் 03 ஆம் திகதி வீடுவீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட முடியும் எனவும், சுகாதார விதிகளுக்கு அமைய 05 பேர் கொண்ட குழுவொன்றாக மட்டுமே அமைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் காலப்பிரிவில் பிரசுரங்கள் விநியோகிப்பதும் தடை செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஜூலை 31 (வெள்ளிக்கிழமை), ஆகஸ்ட் 01 (ஹஜ்ஜுப் பெருநாள் தினம்), 02, 03 (போயாதினம்) திகதிகளில் சமய அனுஷ்டானங்களின் பெயரில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தேர்தல் பிரச்சாரம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு, அடுத்த நாள் வீடு வீடாகச் செல்லலாம்....
Reviewed by Editor
on
July 30, 2020
Rating:
Reviewed by Editor
on
July 30, 2020
Rating:
