(றிஸ்வான் சாலிஹூ)
கல்குடா, ஓட்டமாவடியைச் சேர்ந்த டாக்டர். சம்சுதீன் அஹமட் பரீட் இன்று (30) வியாழக்கிழமை முதல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராக (VP) நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்சுதீன் – பல்ஹீஸ் தம்பதிகளின் புதல்வரான இவர், ஓட்டமாவடி மத்திய கல்லூரி, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை, மருதமுனை சம்ஸ் தேசிய பாடசாலைகளின் ஆரம்ப மற்றும் உயர் தர கல்வியை கற்று அதன் பின்னர் ரஜரட்ட பல்கலைக்கழக மருத்து பீடத்திற்கு மருத்துவ மாணவனாக தெரிவு செய்யப்பட்டார்.
மருத்துவ பட்டப் படிப்பை நிறைவு செய்த இவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில), கொழும்பு பொலிஸ் வைத்தியசாலை, சிறி ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியராக மற்றும் சிரேஷ்ட வைத்தியராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய பொது வைத்திய நிபுணர் நியமனம்
Reviewed by Editor
on
July 30, 2020
Rating:
Reviewed by Editor
on
July 30, 2020
Rating:
