(றிஸ்வான் சாலிஹூ)
காரைதீவு மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தமிழ் சகோதர, சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் தேசிய காங்கிரஸின் கொள்கையோடு ஒன்றிணைந்து பயணிக்க உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைமையோடு இணைந்துகொண்டனர்.
தேசிய காங்கிரஸின் தலைமை ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் தலைமையிலும், கல்முனைத்தொகுதி வேட்பாளர் றிஷாத் ஷரீஃப் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நேற்று (4) சனிக்கிழமை காலை கிழக்கு வாசலில் இடம்பெற்ற இச்சந்திப்பிலே இவர்கள் இணைந்து கொண்டவர்கள்.
நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனவாத அரசியல் கலாசாரத்தில் நின்றும் முற்றிலும் மாறுபட்ட இன, மத, வர்க்க பாகுபாடற்ற தேசியவாத நீரோட்ட அரசியல் செய்து கொண்டிருக்கும் தேசிய காங்கிரஸின் தனித்துவ கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, தாமாகவே முன்வந்து இணைந்து கொண்டதாக கட்சியில் இணைந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தியத்தை உணர்ந்து எமது இலட்சிய பயணத்தில் புதிய ஆதரவாளர்கள் அதிலும் விசேடமாக தமிழ் சகோதரர்கள் சாரை சாரையாக இணைந்துகொள்வது தேசிய காங்கிரஸ் கட்சியின் பாதையே மென்மேலும் வலுப்படுத்தி புடம் போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய காங்கிரஸோடு கைகோர்க்கும் தமிழ் சகோதர சகோதரிகள்.....
Reviewed by Editor
on
July 05, 2020
Rating:
Reviewed by Editor
on
July 05, 2020
Rating:



