கிளிநொச்சியில் வீதிவிபத்து,ஒருவர் உயிரிழப்பு!


கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (05) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் வியாபார நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் குறித்த விபத்தில் தீக்கிரையாகியுள்ளது.

ரிப்பர் வாகனத்துடன் மோதுண்ட குறித்த மோட்டார் வாகனம் அந்த வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடனும் மோதுண்டுள்ளது.

இவ்விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் வீதிவிபத்து,ஒருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் வீதிவிபத்து,ஒருவர் உயிரிழப்பு! Reviewed by Editor on July 05, 2020 Rating: 5