சாரதியின் தூக்கத்தினால், வாகனம் விபத்தில்!!!!


பொத்துவில் மூன்றாம் கட்டை கல் பங்களா என்று அழைக்கப்படும் இடத்தில் இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றிருப்பதாக வாகனத்தின் சாரதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மாத்தறையிலிருந்து கதிர்காமம் ஊடாக, பொத்துவில் நோக்கி வந்த பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
வாகனத்தில் பயணம் செய்த ஒருவருக்கே காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதியின் தூக்கத்தினால், வாகனம் விபத்தில்!!!! சாரதியின் தூக்கத்தினால், வாகனம் விபத்தில்!!!! Reviewed by Editor on July 17, 2020 Rating: 5