கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் கடமையேற்பு


கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மீண்டும் எம்.ரி.ஏ.நிஸாம் இன்று (17) வெள்ளிக்கிழமை காலை தனது கடமையை திருகோணமலையில் உள்ள கல்விப் பணிமனையில் பொறுப்பேற்றார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனாப். நிசாம் அவரால் தொடரப்பட்ட வழக்கில் திரு. எம்.கே.எம். மன்சூர் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆக கடமையாற்ற தடையுத்தரவு வழங்கப்பட்டதை அடுத்தே நிசாம் இன்று தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேற்படி தடையுத்தரவு மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு
(Until Determination of this Case) முடிவ
டையும் வரை நடைமுறையில் இருக்கும்
என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நன்றி - நிந்தவூர் டுடே
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் கடமையேற்பு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் கடமையேற்பு Reviewed by Editor on July 17, 2020 Rating: 5