புரவிகள் படை புறப்படுகிறது


புரவிகள் படை புறப்படுகிறது
புதுமைகள் படைப்போம் வாருங்கள்
குதிரைத் தலைவன் தேசத்தில்
குதூகலித்திருக்க வாருங்கள்

புள்ளடிப் போரல்ல இது
புகுழ்மிகு சமுதாயச் சமர்
கல்லடி பட்டாலும்
காயங்கள் தொட்டாலும்
குணசீல தளபதிகள்
களத்தில் நிற்கும்
கொள்கைக்கான புலம் இது
கைகோர்த்துப் பயணிக்க
கிளர்ந்தெழுந்து வாருங்கள்

வாலிபத்து வீர வீராங்கனைகளே
வயோதிபத்து கனவான்களே
ஓரத்தில் நின்று
ஓய்வெடுக்க நேரமில்லை
வீரத்தைக்காட்டி
விரைந்து வாருங்கள்

இணக்கமிக்க மனிதர்களாய்
பிணக்கமின்றி வாழ்ந்திட
சுணக்கமின்றி விரைந்து
உண்மைக்குள் வாருங்கள்

எண்ணமே வாழ்வு
ஏற்ற இணக்கமே வெற்றி
இலங்கைத் திரு நாட்டின்
இயல்புகளை புரிந்துகொண்டு
உத்திச் சமர் உலாவ
உதவுவதற்கு வாருங்கள்

குதிரைக்கு நேரே
குறித்திடும் புள்ளடியும்
ஓராம் இலக்கத்துள் புள்ளடியும்
ஓங்கும் இரு புள்ளடிகளும்
அதிக பெரும்பான்மையை
அம்பாறையில் அமைத்திட
அறைகூவல் விடுப்பதால்
புழுதி பறக்க புறப்பட்டு வாருங்கள்

பரியின் சின்னத்தில்
பற்றில்லாதோரே
பற்று எதுவென
பகுக்காது இருப்போரே
பரியை பற்றிப்பிடித்து
பக்தியுடன் பத்திரப்படுத்த
பக்குவமாய் யோசியுங்கள்
பவுத்திரமாய் நேசியுங்கள்
புதிது புதிதாய்
புலரும் பொழுதுகளில்
பொல்லடித்து மகிழ்ந்திருக்க
புறப்பட்டு வாருங்கள்

சந்தித்தோர் எல்லோரிடமும்                                
சலாம்கூறி கலந்திருக்க
சந்தோசமாய் வாழ்ந்திருக்க
சிந்தனைக்குள் வாருங்கள்

சமரசப்போர் சரி என்றால்
சரித்திரங்கள் சாட்சி என்றால்
உத்தி வழி உகந்ததென்றால்
உள்மனதில் ஆமோதித்திருந்தால்
அணிதிரண்டு வாருங்கள்

அசுவச் சின்ன போராளிகளே!
புரவித்தலைவனின்
புதுமை வழியில்
புரிதல்களுடன் புறப்படுவோம்
புரவிகள் படை புறப்படுகிறது

(ஆக்கம் :  All 'D' Manaff)
புரவிகள் படை புறப்படுகிறது புரவிகள் படை புறப்படுகிறது Reviewed by Editor on July 24, 2020 Rating: 5