தேசிய காங்கிரஸின் இளைஞர் மாநாடு அட்டாளைச்சேனையில் நடைபெற்றது


(செய்தியாளர் - றிஸ்வான் சாலிஹூ)

தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான இளைஞர் எழுச்சி மாநாடு புதன்கிழமை (22) மாலை, தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஆசிரியர் ஏ.எல்.அஜ்மல் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்,

தற்கால சூழ்நிலையில் எமது கட்சியோடு சகல ஊர்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்த வண்ணம் இருத்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. தற்போது இந்த நாடு இளைஞர்களின் கைகளுக்கு செல்லுமளவுக்கு இளைஞர் சமூதாயம் முன்னேறிச் செல்லும் அளவில் உள்ளது. இளைஞர்கள் தேசிய காங்கிரஸின் வெற்றிப்பங்காளிகளாகவும், இந்த தலைமையின் வெற்றியோடும் எப்போதும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைமை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் தேசிய காங்கிரஸ்
கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தேசிய காங்கிரஸின் இளைஞர் மாநாடு அட்டாளைச்சேனையில் நடைபெற்றது தேசிய காங்கிரஸின் இளைஞர் மாநாடு அட்டாளைச்சேனையில் நடைபெற்றது Reviewed by Editor on July 25, 2020 Rating: 5