வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைரஸ் தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பரிசோதனைகளுக்கு கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று
Reviewed by Editor
on
July 07, 2020
Rating:
Reviewed by Editor
on
July 07, 2020
Rating:
