(மருதமுனை நிஸா)
இரவு பகல் பாராது
அயராதுழைக்கும்
அணுவளவும் சுயமற்ற
இயந்திர மனிதங்கள்
உடல்தனை வருத்தி
பொறுமைதனை நிறுத்தி
நிலையாய் நிற்கும்
இவர்களல்லவா தியாக தீபங்கள்
அருமையான பேச்சினால்
நோயாளிகளை
அன்பினால் வளச்சிபோட்டு
உறவாடுவதில் இவர்களல்லவா
ரத்த பந்தமற்ற உறவுகள்
துணிவாய் பணிவாய்
துயரோடு நோயோடு
வருவோரை வரவேற்று
சீக்கிரமாய் வழியனுப்ப
படாதபாடு இவர்கள்
விழிகளுக்கு அட்டவணை
கொடுத்தியங்கி
மருந்து மாத்திரைகளோடு
மாய்கின்ற விலைமதிப்பற்ற
சிற்பங்கள் இவர்கள்
தூக்கத்தை தூரப்போடும்
துறவிகள் இவர்கள்
கண் விழிக்கும் நேரமெலாம்
கண்முன்னே ஊசி மருந்தோடு
காத்து நிற்கும் காட்சி
கலங்கச் செய்கிறது
தியாக செயல்கண்டு
தாய்க்கு ஒப்பிட்டால்
அளவில் குறை வரத்தான்
செய்கிறது
அளந்தாலும் நிறை
குறைவாய்த்தான் தென்படுமே
நோயாளிகளை நுளம்பொன்று
கடித்துவிடக்கூடாதென்பது
இவர்களின் குறிக்கோளென்னவோ
நுளம்பை விரட்டுவதில்
குறியாய் இருக்கிறார்கள்
கடு கடுவென இவர்கள்
கடிந்து கொள்கிறார்கள்
என்பதே இங்கு
பலரின் முறைப்பாடு
நான் சொல்கிறேன் ஒரு முறை
நோயாளியாய் வந்து
கட்டிலிலே படுத்துப்பாருங்கள்
இவர்களின் தியாக தீபம் எரிவதை
கண்கொண்டு பார்ப்பீர்
துளியும் அருவருப்பின்றி
எம் காயங்களுக்கு மருந்திடும்
கரங்களுக்கு எங்கணம்
நன்றிகளை சொல்வதென
திணறுகிறேன்
தாதியராக வைத்தியசாலைக்கு
இவர்கள் கிடைத்தது வரமே
நோயாளிகளுக்கு இவர்கள்
கிடைத்தது அருளே
நீண்ட ஆயுளோடு
நீளமான ஆரோக்கியத்தோடு
நீடூளி வாழ
இவர்களை வாழ்த்துவோம்
இனியாவது இவர்கள்
தியாகமறிந்து போற்றுவோம்.
தியாக தீபங்கள்!!!!
Reviewed by Editor
on
July 07, 2020
Rating:
Reviewed by Editor
on
July 07, 2020
Rating:
