மத்திய முகாமில் தேசிய காங்கிரஸ் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது


(றிஸ்வான் சாலிஹூ)

தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயம் மத்திய முகாம் பிரதேசத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களினால் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களான சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், பேராசிரியர் எம்.எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் மத்திய முகாமில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்குச் சென்று விகாரதிபதியைச் சந்தித்ததுடன் மத்திய முகாம் பிரதேச பஸார் பகுதியில் தேர்தல் பிரச்சார பணிகளிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



மத்திய முகாமில் தேசிய காங்கிரஸ் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது மத்திய முகாமில் தேசிய காங்கிரஸ் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on July 27, 2020 Rating: 5