சர்வதேச அடிப்படையிலான பெருநாள் தொழுகை அக்கரைப்பற்றில் நடைபெற்றது


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று இஸ்லாமிய வழிகாட்டல் அழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச அடிப்படையிலான புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசாங்கம் இன்று (31) காலை 6.30மணிக்கு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவை அஷ்ஷேக் அப்துல் ஹமீட் (ஷரயி) நிகழ்த்தினார்.

ஹஜ் பெருநாள் தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



சர்வதேச அடிப்படையிலான பெருநாள் தொழுகை அக்கரைப்பற்றில் நடைபெற்றது சர்வதேச அடிப்படையிலான பெருநாள் தொழுகை அக்கரைப்பற்றில் நடைபெற்றது Reviewed by Editor on July 31, 2020 Rating: 5