நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட 12ம் கிராம ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.ஏ.இம்தியாஸ் தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டார்.
தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளரும், சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள்
நாவிதன்வெளி பிரதேசத்தில் முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது தேசிய காங்கிரஸ் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் எஸ்.நபீர் அவர்களின் முன்னிலையில் இணைந்துகொண்ட அமைப்பாளர் இம்தியாஸ் , வேட்பாளர் சலீம் அவர்களுடன் இணைந்து தேசிய காங்கிரஸிற்காக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் மற்றும் பல அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் தேசிய காங்கிரஸில் இணைவு.
Reviewed by Editor
on
July 10, 2020
Rating:
Reviewed by Editor
on
July 10, 2020
Rating:
