அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மாவின் புதிய வகுப்பறைக் கட்டட திறப்பு விழாவும், இணையதள அங்குரார்ப்பணமும்.
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மாவின் புதிய வகுப்பறைக் கட்டடமும், பைத்துல் ஹிக்மாவின் இணையத்தள (www.baithulhikma-akp.com) அங்குரார்ப்பணமும் உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை (4) திறந்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மாவின் தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர மேயர் கௌரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸஹீ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மாநகர முதல்வர்,
அக்கரைப்பற்றின் அபிவிருத்திகளும் சாதனைகளும் பலத்த சவால்களுக்கு மத்தியில் அடைந்து கொள்ளப்பட்டவை.எதிர் நீச்சல் நிரம்பியவை. அதற்கு நமது மண் பழக்கப்பட்டிருக்கிறது.பைத்துல் ஹிக்மா நமது அடையாளம். சமுகத்திற்காக நல்ல காரியங்களை செய்பவர்களுக்கு என்றும் நாம் துணை நிற்க வேண்டும்.அந்தவகையில் எங்களால் முடியுமானவற்றை செய்து கொண்டிருக்கிறோம். மேலும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்று மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மதுல்லாஹ், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர், அக்கரைப்பற்று உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.எல் அப்துல் லத்தீப்(பஹ்ஜி) , அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்களின் சம்மேளத் தலைவர் அல்ஹாஜ் எம்.சீ.எம்.லாபீர், பைத்துல் ஹிக்மாவின் ஸ்தாபகர் பொறியியலாளர் எஸ்.எல்.எம் அலியார், முன்னாள் தலைவர்களான ஜனாப் எம்.ஐ.எம் சகாப்தீன், ஜனாப் எம்.ஏ.சி.ஏ.ஹையூ, பைத்துல் ஹிக்மாவின் செயலாளர் அல்-ஹாஜ் எம்.எல்.எம்.லாபீர், பொருளார் அல்-ஹாஜ் எஸ்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மாவின் புதிய வகுப்பறைக் கட்டட திறப்பு விழாவும், இணையதள அங்குரார்ப்பணமும்.
Reviewed by Editor
on
July 11, 2020
Rating:
Reviewed by Editor
on
July 11, 2020
Rating:




