பெப்ரவரி மாத மின் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கும் அறவிடப்படும்


மின் பாவனையாளர்களின் பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மூன்று மாதங்களுக்கும் அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் முதல் நாட்டில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாட்டினால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகளவில் அறவிடப்பட்டதாக மின் பாவனையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி மாத மின் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கும் அறவிடப்படும் பெப்ரவரி மாத மின் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கும் அறவிடப்படும் Reviewed by Editor on July 15, 2020 Rating: 5