கொரோனா வைரஸ் காலப்பகுதியில் பாவிக்கப்பட்ட நீருக்கான கட்டணத்தை, இதுவரை செலுத்தாத பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தை இவ்வருட இறுதி வரை துண்டிக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சபையின் பொது முகாமையாளர் ஆர்.எஸ்.ருவீன்ஸ் தெரிவித்துள்ளார்.
இச்சலுகை வீட்டு நீர்ப்பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு,மாதாந்தம் 25அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு 10வீத சலுகை வழங்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் இதுவரை நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(நன்றி - நியுஸ் பெஸ்ட்)
நீர் விநியோகத்தை வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானம்
Reviewed by Editor
on
July 18, 2020
Rating:
Reviewed by Editor
on
July 18, 2020
Rating:
