திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் X-ray தொகுதி திறந்து வைக்கப்பட்டது


திருக்கோயில் ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில்  இரண்டரை கோடி ரூபா செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள  புதிய X-ray தொகுதி நோயாளர்களின் பாவனைக்காக இன்று (27) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக இதனை ஆரம்பித்து வைத்தார்.   

அத்துடன் நீண்ட காலமாக இவ்வைத்தியசாலைக்கு தேவையாக இருந்து வந்த பாரிய ஜெனரேட்டர் தொகுதி ஒன்றும் இதன் போது வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் X-ray தொகுதி திறந்து வைக்கப்பட்டது திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில்   X-ray தொகுதி திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on July 27, 2020 Rating: 5