இலங்கையில் கொரோனா மரணம் 12 ஆக உயர்வு

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 12 நபர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி இன்று (23) அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரை 12 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 2,947ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கையில் கொரோனா மரணம் 12 ஆக உயர்வு இலங்கையில் கொரோனா மரணம் 12 ஆக உயர்வு Reviewed by Editor on August 23, 2020 Rating: 5