இறக்காமத்தில் மத்தியஸ்த சபை ஆரம்பிக்கப்பட்டது

 

நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைகள் இன்று (22) இலங்கை முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த காலம் இலங்கையில் கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக மத்திய சபைகள் நாடு பூராகவும் இடைநிறுத்தப்பட்ட வேளையில் தற்போது நாட்டில்  கொரோனா கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் நாடு முழுவதும் மத்திய சபைகள் மீண்டும் நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய சபைகள் இன்று (22) சனி இறக்காமம் மவுலானா சென்டர் கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இறக்காமத்தில் மத்தியஸ்த சபை ஆரம்பிக்கப்பட்டது இறக்காமத்தில் மத்தியஸ்த சபை ஆரம்பிக்கப்பட்டது Reviewed by Editor on August 22, 2020 Rating: 5