இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை (06) நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் வாக்குகள் தவிர்ந்த ஏனைய வாக்குகளின் முதலாவது பெறுபேற்றை நாளை(06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிட முடியும் என்றும், முழுமையான தேர்தல் பெறுபேறுகளை 07ஆம் திகதிக்குள் வெளியிட முடியும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் உத்தியோகபூர்வ பெறுபேறு வெளியாகும்!!!
Reviewed by Editor
on
August 05, 2020
Rating:
Reviewed by Editor
on
August 05, 2020
Rating:
